தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கரோனா

19th Oct 2020 06:11 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் புதிதாக 3,536 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (அக். 19, திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தில் புதிதாக 3,536 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,90,936 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய அறிவிப்பில் மேலும் 49 பேர்(அரசு மருத்துவமனை -24; தனியார் மருத்துவமனை - 25) பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 10,691 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் மேலும் 4,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,42,152 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 38,093 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று 85,130 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 90,31,696 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அரசு பரிசோதனை ஆய்வகங்கள் 66, தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் 126 என மொத்தம் 192 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT