தமிழ்நாடு

தொப்பூரில் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி பற்றியெரிந்தது

DIN

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலிருந்து, கர்நாடக மாநிலம், பெல்லாரிக்கு சுமை ஏற்றி வருவதற்காக லாரி ஒன்று திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை குமாரபாளையத்தைச் சேர்ந்த மணி(45) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் திருச்சியைச் சேர்ந்த மாற்று ஓட்டுநர் நடராஜன் (48) என்பவர் லாரியில் வந்துகொண்டிருந்தார்.

இந்த லாரி, தருமபுரி அருகே தொப்பூர் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது. அப்போது, கட்டமேடு என்கிற இடத்தில் செல்லும்போது, லாரி என்ஜினிலிருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதைக் கண்ட லாரி ஓட்டுநர், லாரியை சாலையோரம் நிறுத்தினார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரி, மள, மளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதுகுறித்து, தகவல் அறிந்து தொப்பூர் காவல்துறையினர், தருமபுரி தீணையப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள், தொப்பூர் சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆகியோர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். லாரியில் பற்றிய தீயை அணைக்க ஏதுவாக, தருமபுரி மற்றும் சேலத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீரால் லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து, தொப்பூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து தொடர்பாக, சேலம்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT