தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி

19th Oct 2020 04:49 PM

ADVERTISEMENT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளித்த முதல்வர் பழனிசாமிக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

'மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT