தமிழ்நாடு

கரோனா பரிசோதனை முடிவுகள் பெறுவதில் சிக்கல்: அரசு நடவடிக்கை எடுக்க எல்ஐசி ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

DIN


கரோனாப் பரிசோதனை முடிவுச் சான்றுகளை பெறுவதில் அரசு ஊழியர்கள் மிகப் பெரியச் சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென எல்ஐசி ஊழியர் சங்கத்தின் தஞ்சைக் கோட்ட இணைச் செயலாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது, 

கரோனாப் பரவல் என்பது தற்போது எங்கு பார்த்தாலும் உள்ளது. இதன் காரணமாகப் பாதிக்கப்படுபவர்கள் பரிசோதனை செய்து கொள்கின்றனர். அவ்வாறு பரிசோதனைச் செய்து கொள்பவர்களுக்கு, கரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அல்லது தனிமையில் இருக்க அறிவுரை கூறுவது நடைபெற்று வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் சிகிச்சைக்குப் பின்னர், 14 நாட்கள் தனிமையிலிருந்த பின்னர், பணியில் சேர்வதற்கு அலுவலகம் செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது, அலுவலக அதிகாரிகள் கரோனாத் தொற்று இல்லை என்ற சான்றிதழ் கேட்கின்றனர். அவ்வாறு சான்று இல்லை எனில் பணியில் சேர முடியாது எனத் தெளிவாகத் தெரிவித்து விடுகின்றனர். 

இதன் காரணமாக மீண்டும் அந்த அரசு ஊழியர்கள் கரோனாப் பரிசோதனைச் செய்துகொள்கிறார். அவ்வாறு செய்து கொண்ட பரிசோதனையின் முடிவு பற்றிய செய்தி கைபேசி மூலம் வருவது கிடையாது. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், சுகாதாரத் துறையின் இணையவழி மூலம் பார்த்துச் சான்று எடுப்பதற்கும் முடியவில்லை. இதுபற்றி பரிசோதனை எடுத்துக்கொண்ட மருத்துவமனைகளில் விசாரிக்கும்போது, பரிசோதனை எடுத்துக்கொண்ட அரசு ஊழியர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றுதான் பெற வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்யப்படும் அனைத்து முடிவுகளுக்கும் நேரடியாக வர வேண்டிய நிலை உள்ளது. இதே திருவாரூர் மருத்துவ மனையில் நீண்ட தூரம் உள்ள பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் பரிசோதனைச் செய்யப் படுவதாகத் தெரிகிறது. காரைக்கால் போன்ற தொலைதூர மாவட்டங்களிலிருந்தும், திருவாரூர் மாவட்டத்தின் எல்லையான 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வலங்கைமான், கோவில்கந்தன்குடி, வேலங்குடி போன்ற தொலைதூர கிராமங்களிலிருந்து, திருவாரூருக்கு நேரடியாக வர வேண்டிய ஒரு நிலை உள்ளது. 

ஆனால் சுகாதாரத் துறையும், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரும், இணையவழியில் முடிவுகளைத் தெரிந்து கொண்டு, சான்றிதழ்களை எடுத்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் நடைமுறையில் அதுபோல எடுக்க முடியவில்லை. எனவே சுகாதாரத் துறையும், மாவட்ட ஆட்சித் தலைவரும், இணையவழிச் சேவையினைச் சரி செய்து, அதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களை, நீண்ட தூரம் அலையவிடாமல், கரோனாப் பரிசோதனை முடிவினை தெரிந்துகொண்டு, சான்றிதழ் எடுத்துக் கொள்ள வசதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT