தமிழ்நாடு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு 

DIN

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 

நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

சிவகாசி 7 செ.மீ மழையும், மலையூர் 6 செ.மீ மழையும், திருமயம் 5 செ.மீ மழையும், குடுமியான்மலை, கலெக்டர் ஆபிஸ், திருப்பூர் 4 செ.மீ மழையும், மானாமதுரை, ஆவுடையார்கோயில், மேட்டுப்பட்டி, திருப்பத்தூர், திருவுனம், பொன்னேரி, திருப்பட்டூர், நாட்றம்பள்ளி, அன்னவாசல் தலா 3 செ.மீ மழையும், பொன்னமராவதி, டிஜிபி அலுவலகம், நெடுங்கால், செங்குன்றம், தாமரைப்பாக்கம், இலுப்பூர், ஓமலூர், ஊத்தங்கரை, சோழவரம், ராசிபுரம், மருங்காபுரி, அரிமளம், மேட்டூர், சிட்டம்பட்டி, ராயகோட்டை, ஏற்காடு உள்பட்ட இடங்களில் 2 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT