நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து இலங்கைக்குக் கடத்திச் செல்ல ஆயத்தமாக இருந்த 2 கிலோ விரலி மஞ்சள் மூட்டைகளைக் கடலோரக் காவல் குழும காவல்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வேதாரண்யத்தை அடுத்த பெரிய குத்தகை கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் என்ற முனீஸ்வரன் இவரது வீட்டில் விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகக் கடலோரக் காவல் குழும காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்குச் சென்ற காவல்துறையினர், சோதனையிட்டனர். அப்போது 2 ஆயிரம் கிலோ மஞ்சள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கைப்பற்றிய காவல்துறையினர் முனீஸ்வரனையும் கைது செய்தனர்.