தமிழ்நாடு

மானாமதுரை பகுதி கோயில்களில் நவராத்திரி விழா தொடங்கியது

18th Oct 2020 11:24 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோவில்களில் கடந்த சனிக்கிழமை இரவு நவராத்திரி விழா தொடங்கியது. 

மானாமதுரையில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ஆனந்தவல்லி சமேத சோமநாதர் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியதை முன்னிட்டு கோவிலில் அம்மன் சன்னதி மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்ததது. மூலவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவர் ஆனந்தவல்லி அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

நவராத்திரி விழா தொடக்கமாக, உற்சவருக்கு கையில் காப்பு அணிவிக்கப்பட்டது. அதன்பின் மூலவருக்கும் உற்சவருக்கும் மகா தீபாரதனை நடைபெற்றது. 

ADVERTISEMENT

அர்ச்சகர்கள் ராஜேஷ் பட்டர், சக்கரைப் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்டோர் நவராத்திரி விழா வழிபாட்டுக்கான பூஜைகளை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து ஆனந்தவல்லி அம்மனையும் சோமநாதர் சுவாமியையும் தரிசனம் செய்தனர். 

மானாமதுரையில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளதை  முன்னிட்டு சனிக்கிழமை இரவு ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த ஆனந்தவல்லி அம்மன். 

தொடர்ந்து 9 நாள்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் தினமும் இரவு உற்சவர் ஆனந்தவல்லி அம்மன் வெவ்வேறு அலங்காரங்களில் கோவிலில் அம்மன் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பார். 

மானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்கியது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். கோவிலில் கொலு அலங்காரம் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து கொலு அலங்காரத்தை பார்வையிட்டனர்.

இக் கோவிலில் தொடர்ந்து 9 நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி கோவில் யாகசாலையில் கொலு அலங்காரம் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது.
 

Tags : Navratri festival Manamadurai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT