தமிழ்நாடு

சுப்ரமணியன் மகன் மறைவு நெஞ்சை உறைய வைத்துவிட்டது: ஸ்டாலின்

17th Oct 2020 04:49 PM

ADVERTISEMENT

 

அருமைச் சகோதரர் மா. சுப்பிரமணியன் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 34.

அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், அருமைச் சகோதரர் மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது, என் நெஞ்சை உறைய வைத்துவிட்டது 

ADVERTISEMENT

ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த அன்பழகனை  மா.சுப்பிரமணியனும், அவரது துணைவியார் காஞ்சனா சுப்பிரமணியனும், கண்ணின் மணி போல் இத்தனை ஆண்டுகள் காத்துவந்ததை கரோனா வந்து பறித்துச் சென்று விட்டது.

மா.சு. இணையர்க்கு என்ன ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை.

ஊரார்க்கு ஒன்று என்றால், உடனே ஓடோடிப் போய் நிற்கும் மா.சு.வுக்கு, இப்படி ஒரு சோதனையா? செல்வன் அன்பழகன் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags : DMK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT