தமிழ்நாடு

கம்பத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

17th Oct 2020 05:36 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் கம்பத்தில் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள சிறு தெருக்கள் முதல் பெரிய வீதிகள் வரை சாலை மற்றும் சாக்கடை கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வீடுகள் கட்டியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. 

இது குறித்து பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலைத்  தடுக்கும் பொருட்டு 33 வார்டுகளிலும் உள்ள முக்கிய வீதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பகுதிகளில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். முதல்கட்டமாகக்  கணபதி அக்கரகார தெருவில் தனிநபர் ஒருவர் கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியிலிருந்து வெளியாகும் கழிவுநீர் சாக்கடை கால்வாயில் செல்லமுடியாமல் இருந்து வந்தது.

ADVERTISEMENT

மேலும் மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவு நீர் கால்வாயில் செல்லமுடியாமல் தெருக்களில் ஓடின. அதன்  பேரில் கம்பம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வராணி தலைமையில் கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் நகராட்சி  பணியாளர்கள் காவல்துறை பாதுகாப்புடன் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கட்டடத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் இடித்து அகற்றினர். 

இது குறித்து நகராட்சி ஆணையாளர் கூறுகையில், 

கம்பம் நகராட்சி பகுதியில் சாலை  மற்றும் சாக்கடை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களைத் தொடர்ந்து கற்றி வந்தோம். கரோனா நடவடிக்கையின் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT