தமிழ்நாடு

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

17th Oct 2020 04:21 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்குப் பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுகப் பிரத்யங்கிரா தேவி கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை யாகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டியும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும் கோயில் யாக சாலையில் நடைபெற்ற இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். 

தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் யாகத்தை நடத்தினார். யாகத்தில் பட்டுப்புடவைகள், தங்கம், வெள்ளி, திரவியப் பொருள்கள், பூமாலைகள் உள்ளிட்ட பல பொருள்கள் இடப்பட்டன. பூர்ணாஹுதி முடிந்ததும்  கடம் புறப்பாடு நடந்தது. பிரத்யங்கிரா தேவிக்கு புனித நீரால் பாத சமர்ப்பணம் நடைபெற்று மகா தீபாரதனை காட்டப்பட்டது. யாகத்துக்கான ஏற்பாடுகளை பிரத்யங்கிரா ஸாக்த மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் செய்திருந்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT