தமிழ்நாடு

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்: செஞ்சி மாணவி தற்கொலை முயற்சி 

17th Oct 2020 11:51 AM

ADVERTISEMENT

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற செஞ்சியைச் சேர்ந்த  மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ராஜேந்திரா நகர் ஏழாவது தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் மகள் ரம்யா தேவி (வயது 19).

இவர் நிகழாண்டு செப்டம்பர் 13 இல் நடைபெற்ற, மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினார்.  இதன் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது.

இதில், மாணவி ரம்யாதேவி 205 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதால் மனமுடைந்த ரம்யாதேவி, சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த கொசு மருந்தை குடித்து விட்டார். 

உடனடியாக இவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : NEET exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT