தமிழ்நாடு

கடையநல்லூரில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

17th Oct 2020 02:18 PM

ADVERTISEMENT

கடையநல்லூர்: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடையநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் காசிதர்மம் குளத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  

நிலைய அலுவலர் குணசேகர் தலைமையில் தலைமை தீயணைப்பு வீரர்கள் ஜெயரத்தினகுமார், மாரிமுத்து , வீரர்கள் குமரேசன் ,தங்கதுரை முத்துக்குமார் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து  வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் அவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

Tags : Disaster Rescue Rehearsal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT