தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் மகன் மறைவு: முதல்வர் இரங்கல்

17th Oct 2020 08:04 PM

ADVERTISEMENT

திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியன் மகன் அன்பழகன் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 34. சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அன்பழகன், இன்று சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த நிலையில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்தின் மகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி, சென்னை, சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியனின் இளைய மகன் சு.அன்பழகன் உடல்நல குறைவால் இன்று காலமானதையொட்டி சட்டப்பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, ஆறுதல் கூறினார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT