தமிழ்நாடு

நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

17th Oct 2020 10:53 AM

ADVERTISEMENT


ஈரோடு: கோபி அருகே பாசன வாய்க்கால்லில்  மூழ்கி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். 

திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டியைச் சோ்ந்தவர் சந்தோஷ்(20) மூன்றாமாண்டு பொறியியல் கல்லூாி மாணவரான இவர், ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கொடிவேரி அணை, அரக்கன்கோட்டை வாய்க்காலில் நண்பா்களுடன் சனிக்கிழமை காலை குளித்துக்கொண்டிருந்தார். சந்தோஷ்க்கு நீச்சல் தொியாததால் வாய்க்கால் நீாில் மூழ்கினார்.   

தகவல் அறிந்து அங்கு சென்ற பங்களாபுதூர் காவலர்கள், சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையின் உதவியுடன்  உயிரிழந்த சந்தோஷ் உடலை கைப்பற்றி பிரேத பாிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Tags : College student
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT