தமிழ்நாடு

ஓசூர் சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கட்டுக் கட்டாக பணம் பறிமுதல்

17th Oct 2020 12:16 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை பறிமுதல் செய்தனர்

தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதனையிடவும், தற்காலிக பர்மிட் வழங்கவும் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல சற்றுத் தொலைவில் சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களை தணிக்கை செய்து தற்காலிக பர்மிட் வழங்க ஒரு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்சமான வாகனங்கள் இடம் பெயர்வது இந்த சோதனைச் சாவடிகள் வழியாகத்தான்,ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இதைக் கடக்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஒரு குழுவினர் இன்று அதிகாலை ஓசூர் செக்போஸ்ட்களுக்கு வந்தனர்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்தில் நுழையக்கூடிய சோதனைச்சாவடியில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாயை மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது இரவு பணிக்கு வந்த சில மணி நேரங்களில் இந்த செக்போஸ்டில் இருந்த ஆர்டிஓ அதிகாரிகள், ஊழியர்கள் வாங்கியுள்ள கணக்கில் வராத பணம் இவை.

இதையடுத்து இந்த செக்போஸ்ட்டில் பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம், உதவியாளர் ராமலிங்கம் இருவரிடம் துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது

Tags : Anti-corruption police raid Hosur checkpost
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT