தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 12:23 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர்:  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் அஇஅதிமுகவின் துவக்க விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா, ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
       
இதில், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்ச்சாமி, மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்தி மான்ராஜ், வத்திராருப்பு ஒன்றிய குழு தலைவர் சிந்துமுருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் மீரா தனலட்சுமிமுருகன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மணி,முன்னாள் நகரச் செயலாளர்கள் முத்துராஜ், எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகரப் பொருளாளர் கருமாரி முருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட கிராம பகுதிகளுக்கு சென்று கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

Tags : AIADMK inauguration ceremony Srivilliputhur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT