தமிழ்நாடு

நாமக்கலில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 02:10 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆர் உருவச்சிலைக்கு நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நாமக்கல்-சேலம் சாலையின் இருபுறத்திலும் கழிவு நீரோடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். 

இதேபோல் சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன், சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

ADVERTISEMENT

தொடர்ந்து அதிமுகவின் 49-ஆவது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டமாக கட்சியினர்,  பொதுமக்களுக்கு அவர் இனிப்புகளை வழங்கினார்.

Tags : AIADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT