தமிழ்நாடு

உசிலம்பட்டியில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 12:58 PM

ADVERTISEMENTஉசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 27 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை மற்றும் பேவர்பிளாக் சாலையை அதிமுகவின் 49 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு  உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பா.நீதிபதி திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி யில் தமிழகம் முழுவதும்  கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிமுகவின் 49 ஆவது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடப்பட்டு வரும் சூழலில்,
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகரம், செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில்  முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்.மற்றும் ஜெயலலிதா திருஉருவ படங்களுக்கு மலர் தூவி உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பா.நீதிபதி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அதிமுக கழக கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கியும், 27 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடைகள் மற்றும் பேவர்பிளாக் சாலையினை திறந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMK Annual  inauguration Usilampatti
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT