தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டியில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 12:34 PM

ADVERTISEMENTகும்மிடிப்பூண்டி: அதிமுக கட்சியின் 49ஆம் ஆண்டின் துவக்க விழா கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு தலைமை வகித்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்வில் நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர், ஒன்றிய பாசறை செயலாளர் டி.சி.மகேந்திரன், நகர அதிமுக நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, இமயம் மனோஜ், எம்.எஸ்.எஸ்.சரவணன்,  ஓடை ராஜேந்திரன், பி.டி.சி.ராஜேந்திரன், மேலவை பிரதிநிதி தீபக் செந்தில்,பாசறை நகர செயலாளர் கே.சரவணன், விஸ்வநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அவை தலைவர் சிராஜுதின், இலக்கிய அணி நகர செயலாளர் எம்.ஏ.மோகன், பெத்திக்குப்பம் ஊராட்சி துணை தலைவர் குணசேகரன், முன்னாள் கவுன்சிலர்  உதயகுமார், கே.ரமேஷ், வெற்றி ரவி, நாகப்பன், மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி, சுசிலா, பேபி லட்சுமி முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் இனிப்புகள் வழங்கினார். மேலும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சிலை முன் நின்று எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தலைமையில் அதிமுகவினர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிக்கு முழு மூச்சுடன் உழைப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

அதே போல புதுவாயலில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், முன்னாள் மாவட்ட மாணவர் அணி செயலாளர் முல்லைவேந்தன் முன்னிலையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 

Tags : AIADMK inauguration ceremony
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT