தமிழ்நாடு

ஆத்தூரில் அதிமுக 49-ம் ஆண்டு துவக்க விழா

17th Oct 2020 12:28 PM

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் ஆத்தூர் நகர் கழக அதிமுக சார்பில் 49 ஆம் ஆண்டு துவக்கவிழா மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

கோட்டையில் உள்ள எம்ஜிஆர்,ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனையடுத்து அதிமுக கொடியேற்றி கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, ,நகர் செயலாளர் அ.மோகன், அவைத்தலைவர் பி.கலியன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் இரா.தென்னரசு மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், பொருளாளர் துரைசாமி, மகளிரணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : AIADMKs inauguration ceremony Attur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT