தமிழ்நாடு

அதிமுக 49-வது தொடக்க விழா: கட்சி அலுவலகத்தில் ஓ. பன்னீர்செல்வம் கொடியேற்றினார்

17th Oct 2020 01:33 PM

ADVERTISEMENT

 

அதிமுகவின் 49-ஆவது தொடக்கவிழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றினார்.

எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் நிறைவடைந்து, அக்டோபா் 17-ஆம் தேதி 49-ஆவது ஆண்டில் அடி எடுத்துவைத்துள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் இருக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, தனது சொந்த ஊரில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார்.

ADVERTISEMENT

ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்த துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வம் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிா்வாகிகள், அமைச்சா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட அனைத்து அணியின் நிா்வாகிகளும் பங்கேற்றனர்.
 

Tags : ADMK panneerselvam OPS jayalalithaa EPS
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT