தமிழ்நாடு

கருமத்தம்பட்டியில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 04:40 PM

ADVERTISEMENT

 

சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் அதிமுகவின் 49ஆவது ஆண்டு துவக்கத் தினம் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அதிமுகவின் 49ஆவது துவக்க தினம் தமிழகம் முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கருமத்தம் பட்டி பகுதியில் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏசி மகாலிங்கம் தலைமையில் விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டது. 

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி பி கந்தசாமி கலந்துகொண்டு அதிமுக கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் ஆன எம் ஜி ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

இந்நிகழ்வில் சூலூர் ஒன்றிய பெருந்தலைவர் மாதப்பூர் பாலு, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் தோப்பு அசோகன், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல் கணியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் செல்வராஜ் மற்றும் அதிமுகவினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT