தமிழ்நாடு

மேல்விஷாரத்தில் அதிமுக ஆண்டு விழா

17th Oct 2020 04:34 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு, ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சார்பில் கட்சியின் 49-வது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் அண்ணாசாலையில் நடைபெற்ற விழாவிற்கு நகரச் செயலாளர் ஏ.இப்ராஹீம்கலிலுல்லா தலைமை வகித்தார். முன்னாள் நகர மன்ற தலைவர் பி.அப்துல்ரஹ்மான், முன்னிலை வகித்தார். மாநில வக்புவாரிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அ.முஹமதுஜான் எம்.பி  கலந்துகொண்டு கட்சியின் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட நலிந்தோர்களுக்கு வேட்டி, சேலை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட பொருளாளர் எஸ் எம்.சுகுமார், நகரப் பேரவை செயலாளர் அக்பர்பாஷா, நகரத் துணை செயலாளர் மணி  உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT