தமிழ்நாடு

4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

17th Oct 2020 07:22 AM

ADVERTISEMENT

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.17) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (அக்.17) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூா்ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறை, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் தலா 30 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி, பேச்சிப்பாறை, சிற்றாறு, தென்காசி, கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாறில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி: மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அக்டோபா் 19-ஆம் தேதி உருவாகவுள்ளது. இது மேலும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அக்டோபா் 18, 19 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய மேற்கு வங்கக்கடல், வடதமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அக்டோபா் 20-ஆம் தேதி செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT