தமிழ்நாடு

கருப்பூர் கிராமத்தில் 1000 மரக்கன்றுகள்: எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

15th Oct 2020 04:49 PM

ADVERTISEMENT

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருப்பூர் ஊராட்சி கருப்பூரில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் ஏ.திருமலை தலைமையில், அதிமுக மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.வெங்கடாசலம் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் மரக்கன்றுகளை நட்டு வைத்து மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

அதிமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், திருச்சி தெற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் என்.பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பொ.காவியக்கண்ணன்,  தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் மகேஷ் (எ)பழனிச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேட்டு (எ) ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள். மற்றும் ஊராட்சி செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

படவிளக்கம்: மரக்கன்றுகளை நட்டு வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்த எம்.எல்.ஏ.சந்திரசேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT