தமிழ்நாடு

பெரியபாளையம் அருகே பெண்ணை கழுத்து நெரித்துக் கொன்றவர் கைது

14th Oct 2020 04:45 PM

ADVERTISEMENT

 

பெரியபாளையம் அருகே பெண்ணை கழுத்து நெரித்துக் கொலை செய்த வழக்கில் பெண்ணின் உறவினர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 3 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு கொலை நடந்துள்ளதாகக் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அக்கரப்பாக்கம் சவுட்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் கௌரியம்மாள்(40). இவர் ஆரணி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவருக்குச் சொந்தமான பன்றிகளை மேய்க்கச் சென்று விட்டு, மாலையில் வீடு திரும்பாத நிலையில், மறுநாள் புதர் நடுவே கழுத்து நெரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார். வலது காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் தாலி செயின் காணவில்லை. இதனையடுத்து நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

ஆனால், கௌரியம்மாளின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதில் கௌரியம்மாளின் கணவர் எல்லப்பனின் அக்காள் மகன் குமார் என்பவர் தான், கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில், பன்றி மேய்த்துக் கொண்டிருந்த கௌரியம்மாளை, குமார் பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாகவும், அப்போது அவரை கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு, சந்தேகம் வராமல் இருப்பதற்காகத் தாலி செயின் மற்றும் காதிலிருந்து கம்மலை அறுத்துச் சென்றதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

எனினும் உடற்கூறு ஆய்வறிக்கையில் தான் முழுமையான விவரம் தெரியவரும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து குமாரைக் கைது செய்த பெரியபாளையம் காவல் துறையினர் அவரிடம் இருந்து 3 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT