தமிழ்நாடு

’தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்’?

14th Oct 2020 05:16 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனிடையே, தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. 

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறதா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

மேலும், நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளான பள்ளிகள் தங்களின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : highcourt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT