தமிழ்நாடு

கொடைக்கானலில் பராமரிக்கப்படாத தெருவிளக்குகள்

14th Oct 2020 04:10 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானல் பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கொடைக்கானல் பகுதிகளான செண்பகனூர், அட்டக்கடி, இருதயபுரம், வசந்த நகர், ஐயர்கிணறு, சகாயபுரம், கொய்யாபாறை, லாஸ்காட்சாலை, அப்பர்லேக்வியூ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. 

இதனால் பொது மக்கள் அன்றாடப் பணிகளுக்கு பல்வேறு இடங்களில் சென்று விட்டு மீண்டும் தங்களது இல்லத்திற்கு வரும் போதும், மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் போதும் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மேலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்து வருகின்றனர். சில நேரங்களில் வன விலங்குகள் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்தும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே செல்லமுடியாமல் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, கொடைக்கானல் பகுதிகளில் மலைச் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெரு விளக்குகள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT