தமிழ்நாடு

பிப்ரவரிக்குள் கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

14th Oct 2020 04:46 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ,

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கு பிப்ரவரி மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்படும். அதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தேர்தல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்கும். தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் வரை கரோனா பாதிப்பு நீடித்தால் பிகார் தேர்தலில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளை தமிழகத்திலும் கொண்டுவர ஆலோசனை மேற்கொள்ளப்படும், 

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் மூலமாக வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3% பேர் உள்ளனர். 

மேலும், நவம்பர் 3 ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக்கு முன் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார். 

Tags : TN Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT