தமிழ்நாடு

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் கைது

14th Oct 2020 04:01 PM

ADVERTISEMENT

 

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்டத்தில் ஆயுர்வேத சிகிச்சைக்குச் சென்ற இளம்பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவரது தாயாருக்கு ஆயுர்வேத சிகிச்சை செய்ய பாலக்காடாண் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இளம்பெண்ணின் தாயாரைப் பரிசோதித்த மருத்துவமனை நிர்வாகி ரெஜி மற்றும் அவரது தாயாரை சிகிச்சைக்கு தங்குமாறு கூறியுள்ளார். 

பின்னர் இளம் பெண்ணை தனியாக அறையில் அழைத்து பாலியல் கொடுமை செய்துள்ளார். இதுபற்றி இளம்பெண் அடிமாலி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அடிமாலி காவல்தறையினர் ரெஜியை கைது செய்தனர். ரெஜி  கிறிஸ்தவ மத போதகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT