தமிழ்நாடு

ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது: கமல்ஹாசன்

14th Oct 2020 11:49 AM

ADVERTISEMENTசென்னை: ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

கடந்த திங்கள்கிழமை ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர்களான பால் ஆர்.மில்கிரோம், ராபர்ட் பி.வில்சன் ஆகிய இருவருக்கும் ஏலக்கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது என்று தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்துள்ளார். 

மற்றொரு பதிவில், மக்கள் உரிமைகளை மையமாக கொண்ட அரசு அமைய வேண்டும்; மக்கள் நீதி மய்யம் அதைச் செய்யும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், பட்டியலின ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளவர், இது பெரியார் மண் என பெருமை பொங்கப் பேசுகிறோம்; இதுவா பெரியார் பேசிய சமத்துவம்? என கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன், அதிகார வெறி, அரசியலில் ஜாதிய கணக்குகள் மேலோங்கி நிற்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Kamal Haasan Prize awaits
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT