தமிழ்நாடு

முதல்வரின் தாயார் மறைவுக்கு குடியரசுத்தலைவர் இரங்கல்

14th Oct 2020 01:03 PM

ADVERTISEMENT

 

முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்,  மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை(அக்.13) அதிகாலை காலமானார்.

முதல்வரின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும், தாயாரை இழந்து வாடும் முதல்வருக்கும், அவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : முதல்வர் பழனிசாமி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT