தமிழ்நாடு

தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் செங்கோட்டையன்

14th Oct 2020 04:55 PM

ADVERTISEMENT

 

சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதனன்று இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது; ஆந்திராவில் அவசரப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு கரோனா பரவியது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுதொடர்பான வழக்கொன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, நவம்பர் 11ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT