தமிழ்நாடு

முருகன் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது: டி.கே.எஸ் இளங்கோவன்

14th Oct 2020 05:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: முருகன் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என்று திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் புதனன்று நடைபெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன், ‘அவர்கள் என்னதான் கூட்டம் போட்டாலும் திமுக தேர்தல் அறிக்கை ஜீரோ ஆகி விடும்‘ என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ‘முருகன் போன்றவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது; தாமரையும் மலராது’ என்று பதிலளித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT