தமிழ்நாடு

மருத்துவ உள்ஒதுக்கீடு: ஆளுநரின் செயலர் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு

14th Oct 2020 12:48 PM

ADVERTISEMENT

நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு அரசுப்பள்ளிமாணவர்களுக்கு  மருத்துவ உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரிய வழக்கில் ஆளுநரின் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவா்களில் நீட் தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை நீட் தேர்வு முடிவுகளை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அழிப்பது குறித்து ஆளுநரின் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை இன்று பிற்பகல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : madurai HC
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT