தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 376 குறைந்தது!

14th Oct 2020 11:13 AM

ADVERTISEMENT

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 376 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை குறைந்து ஏற்ற, இறக்க நிலையில் உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.376 குறைந்து, ரூ.38,704-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.47 குறைந்து ரூ.4,838-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 1.90 காசுகள் குறைந்து, ரூ.64.60-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.64,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

ADVERTISEMENT

புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,838

1 சரவன் தங்கம்............................38,074

1 கிராம் வெள்ளி.............................64.60

1 கிலோ வெள்ளி.............................64,600

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

1 கிராம் தங்கம்.......................... 4,885

1 சரவன் தங்கம்............................39,080

1 கிராம் வெள்ளி.............................66.50

1 கிலோ வெள்ளி.............................66,500

Tags : gold rate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT