தமிழ்நாடு

தமிழக தலைமைச் செயலரின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

14th Oct 2020 03:48 PM

ADVERTISEMENT

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து 3 மாதங்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. 

தொடர்ந்து, அக்டோபர் மாத இறுதியுடன் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, 2021 ஜனவரி 31 ஆம் தேதி வரை பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசின் பணிகளில் தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT