தமிழ்நாடு

பெரியபாளையம் அருகே செல்போன் கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவர் பலி

14th Oct 2020 04:29 PM

ADVERTISEMENT

 

பெரியபாளையம் அருகே செல்போன் கொள்ளையர்கள் தாக்கியதில் முதியவர் உயிரிழந்தார். இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம் மஞ்சங்கரணை ஊராட்சிக்குட்பட்ட கோட்டைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மாதவன்(60). இன்று காலை வழக்கம் போல வயல்வெளியில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் முதியவர் மாதவன் மீது இரும்பு கம்பியால் பலமாகத் தாக்கி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். 

இதில், பலத்த காயமடைந்த முதியவர் மாதவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் செங்குன்றம் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து சடலத்தைக் கைப்பற்றிய பெரியபாளையம் காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ADVERTISEMENT

இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் தெரிவித்தார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT