தமிழ்நாடு

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

14th Oct 2020 11:36 AM

ADVERTISEMENT

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மேலும், குழு உறுப்பினர்களான கனிமொழி, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். 

முன்னதாக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்கள் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். 

ADVERTISEMENT

2021 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக இறங்கியுள்ளது. 

Tags : திமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT