தமிழ்நாடு

குஷ்பு மீது காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார்!

14th Oct 2020 06:46 PM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகை குஷ்பு மீது காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகை குஷ்பு  பாஜகவில் இணைந்துள்ளார்.

தில்லியில் இணைப்பு நிகழ்வு முடிந்து சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘காங்கிரஸ் கட்சியினை  மூளை வளர்ச்சி அற்றவர்களின் கட்சி’ என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் அமைந்த அவரது பேச்சுக்கு அப்போதே டிசம்பர் 3 அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை குஷ்பு மீது காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை பரங்கிமலை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ள புகாரில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் மோசமாக விமர்சித்துப் பேசிய நடிகை குஷ்பு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT