தமிழ்நாடு

அருப்புக்கோட்டையில் 10 நாள்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு 

14th Oct 2020 02:58 PM

ADVERTISEMENT


அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் கிடைக்க ஏற்பாடாகிவிட்டதாக தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளார்.

அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் புதன்கிழமை தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்யேக செய்தியாவது, அருப்புக்கோட்டை நகராட்சிக்கு எமது தனிப்பட்ட கடும் முயற்சி காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 5 நாள்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் கிடைத்து வந்தது.

இதனிடையே, கரோனா ஊரடங்கு தீவிரமாக இருந்த நிலையில்,அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வந்தது. இதனால் தாமிரவருணித் திட்டம் மூலம் மட்டும் கிடைத்த சுமார் 35 லட்சம் லிட்டர் குடிநீரைக் கொண்டு கடந்த சில மாதங்களாக 20 நாள்களுக்கு ஒருமுறை வீதமே குடிநீர் அளிக்க இயன்றது.

இந்நிலையில், மீண்டும் எனது சீரிய முயற்சி மூலம் திருப்புவனம் வைகைத்திட்டம்  மூலம் பழையபடி 20 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்க மீண்டும் ஏற்பாடாகிவிட்டது. எனவே தற்போது முதல் 10 நாள்களுக்கு  ஒருமுறை வீதம் மீண்டும் குடிநீர் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் அருப்புக்கோட்டை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,என அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT