தமிழ்நாடு

விஜயகாந்த் விரைவில் வீடு திரும்புவார்: மருத்துவமனை அறிக்கை

7th Oct 2020 12:48 PM

ADVERTISEMENT

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இருவரும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி வீடு திரும்பினர். 

தொடர்ந்து, வீட்டுக் கண்காணிப்பில் இருந்து வந்த விஜயகாந்துக்கு, செவ்வாய்க்கிழமை மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் அவர் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கரோனா சிகிச்சை முடிந்து தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : விஜயகாந்த்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT