தமிழ்நாடு

சசிகலாவின் சொத்துகள் முடக்கம்

7th Oct 2020 04:00 PM

ADVERTISEMENT


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயர்களில் இருக்கும் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் சசிகலா உள்பட மூன்று பேரின் பெயர்களில் உள்ள சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், சொத்துகள் முடக்கம் தொடர்பான நோட்டீஸை சம்பந்தப்பட்ட இடங்களில் ஒட்டுவதற்கான ஏற்பாடுகளையும் வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உள்பட சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித் துறை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சசிகலா உள்பட மூன்று பேரின் பெயர்களில் இருக்கும் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனைக் காலம் முடிவடைந்து அவர் அடுத்தாண்டு வெளிவரவுள்ளார்.
 

Tags : sasikala
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT