தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்கள்

7th Oct 2020 05:21 PM

ADVERTISEMENT


நாடு முழுவதும் மேலும் 39 சிறப்பு ரயில்களையும் இவற்றில் தமிழகத்தில் 6 ரயில்களையும் இயக்க ரயில்வே வாரியம் இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக ரயில் சேவை இன்னும் முழு அளவில் தொடங்கப்படவில்லை.

எனினும், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மேலும் 39 சிறப்பு ரயில்களை இயக்க அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயில் சேவைகளை இயன்றளவு விரைவில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தமிழகத்துக்கும் தமிழகத்துக்குள்ளும் மேலும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ள 6 சிறப்பு ரயில்களின் விவரம்:

ஏ.சி. படுக்கை வசதி ரயில்கள்
  ரயில் எண் புறப்படும் இடம் சேரும் இடம் ரயில்  நாள்
1. 22807 / 22808 சந்தரகாச்சி சென்னை ஏ.சி. விரைவு ரயில் வாரம் இருமுறை
2. 20601 20602 சென்னை மதுரை ஏ.சி. விரைவு ரயில் வாரம் மும்முறை
3. 12269 / 12270 சென்னை நிஜாமுதீன் ஏ.சி. துரந்தோ ரயில் வாரம் இருமுறை
ஏ.சி. இருக்கை வசதி ரயில்கள்
4. 12028 / 12027 பெங்களூரு சென்னை சதாப்தி செவ்வாய் தவிர்த்து
5. 12243 / 12244 சென்னை கோவை சதாப்தி செவ்வாய் தவிர்த்து
6. 22625 / 22626 சென்னை பெங்களூரு ஈரடுக்கு ரயில் தினசரி

 

Tags : train
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT