தமிழ்நாடு

ஆழியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

7th Oct 2020 12:47 PM

ADVERTISEMENT

 

பொள்ளாச்சி:  ஆழியாறு அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு புதன்கிழமை (அக். 7) முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

பிஏபி திட்டத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டில் 44 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன. 

கோவை மாவட்டம் ஆழியாறு படுகை மண்டலத்தின் பாசனப் பகுதிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து நீா் திறந்து விடக் கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, புதன்கிழமை (அக். 7) முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாள்களுக்கு மொத்தமாக 2 ஆயிரத்து 548 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்து விட முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டார். 

ADVERTISEMENT

இதையடுத்து புதன்கிழமை ஆழியார் அணையில் இருந்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தண்ணீரை திறந்து வைத்தார். உடன் வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, சார் ஆட்சியர் வைத்தியநாதன், பிஏபி கண்காணிப்பு பொறியாளர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அதிமுக கார்த்திக் அப்புசாமி, சக்திவேல், சுந்தரம் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பொள்ளாச்சி கால்வாய் அ மண்டலம்,  வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ஆ மண்டலம், சேத்துமடைக்கால்வாய் அ மண்டலம், ஆழியாறு ஊட்டுக்கால்வாய் அ மண்டலம், சேத்துமடைக்கால்வாய் அ மண்டல பாசனப்பகுதிகளுக்கு  7 ஆம் தேதி முதல் உரிய இடைவெளிவிட்டு  80 நாள்களுக்கு  மொத்தம் 2548 மில்லியன் கனஅடிக்கும் மிகாமல் திறந்தவிடபடவுள்ளது.  

இதனால், கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

Tags : Azhiar dam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT