தமிழ்நாடு

ஏற்காட்டில் சர்வதேச காபி தின விழா

7th Oct 2020 02:23 PM

ADVERTISEMENT


ஏற்காடு:  ஏற்காட்டில் சர்வதேச காபி தின விழா புதன்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கோவை மண்டல  காபி வாரிய துணை இயக்குநர் முனைவர் கருத்தமணி தலைமை வகித்தார். காபி தோட்ட அதிபர் கண்ணப்பன் முன்னிலை வகித்தார்.

விழாவில் துணை இயக்குநர் பேசுகையில், சர்வதேச காபி தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடுகிறோம்.

காபி தினமும் அருந்துவதால் பல நன்மைகள் கிடைப்பதாக , காபி அருமருந்து என்று தெரிவித்தார். மன அழுத்தம், உளவியல் ரீதியான பாதிப்பு உள்ளவர்களுக்கு காபி விடுதலை தருவதாக தெரிவித்தார். 

நாள் தோன்றும் 4 முறை காபி அருந்த வேண்டும் என்றும் சர்வதேச காபி தினம் விவசாயிகள், தொழில்ளார்களின்  நலன்களை மேம்படுத்தல், காபி பற்றி அறியாத மக்களுக்கு தெரிவிப்பது இவ்விழாவின் நோக்கம் என தொரிவித்தார்.

ADVERTISEMENT

விழாவில் காஃபி தோட்ட உரிமையாளர்கள், ஏற்காடு காஃபி வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags : International Coffee Day
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT