தமிழ்நாடு

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

7th Oct 2020 09:01 AM

ADVERTISEMENT

 

காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்த காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தற்போது பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால் இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 6000 கன அடியிலிருந்து 12000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11,318 கன அடியிலிருந்து 8977கன அடியாக சரிந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 98.63 அடியாகவும், நீர் இருப்பு 62.92 டிஎம்சி ஆகவும் இருந்தது.

Tags : Mettur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT