தமிழ்நாடு

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வேன்: முதல்வர் பழனிசாமி

7th Oct 2020 03:57 PM

ADVERTISEMENT

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் செல்வேன் எனவும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிட அயராது உழைப்பேன் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில், 

புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கத்தில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்த இடத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து, அடுத்த முறையும் வாய்ப்பு அளித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப கழகத்தை சீரும் சிறப்போடும் வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதுபோல் அடுத்த நூறாண்டு காலத்திற்கும் கழகத்தை வெற்றி இயக்கமாக உருவாக்கிடவும் என்றும் அயராது உழைப்பேன் என உறுதி ஏற்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

 

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி

தமிழகத்தில் 2021 இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை முன்னிறுத்துவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு உறுப்பினர்களை அறிவித்தார். இதில், அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இதையடுத்து, கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என ஓபிஎஸ் அறிவித்தார். 

Tags : அதிமுக
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT