தமிழ்நாடு

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.3.25 லட்சம் சைபர்கிரைம் பிரிவு மூலம் மீட்பு

7th Oct 2020 01:46 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஆன்லைன் மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.3.25 லட்சம் சைபர்கிரைம் பிரிவு மூலம் மீட்கப்பட்டு மீண்டும் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

சென்னை பெருநகரில், நடைபெறும் சைபர்கிரைம் குற்றங்களை தடுக்கும் பொருட்டு சென்னை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே மாவட்டம்தோறும் புதிதாக சைபர்கிரைம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை  சைபர்கிரைம் பிரிவில் ஒரேநாளில் இரண்டு வழக்குகளில் துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டு, ரூ.3.25 லட்சம் அளவுக்கு மீட்கப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஒரே நாளில் இரண்டு வழக்குகளில் விசாரணை நடத்தி முடித்த அடையாறு சைபர் கிரைம் பிரிவு காவல் ஆளிநர்களை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
 

Tags : cyber crime police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT