தமிழ்நாடு

வேதாரண்யத்தில் அதிமுகவினர் கொண்டாட்டம்

7th Oct 2020 12:07 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து,  வேதாரண்யத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் நகர வீதிகளில் பட்டாசு வெடித்த அதிமுகவினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

கட்சியின் ஒன்றியச் செயலாளர்கள் இரா. கிரிதரன், டி.வி.சுப்பையன், ஒன்றியக்குழுத் தலைவர் கமலா அன்பழகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

Tags : Chief Ministerial candidate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT